Description
உணவு யுத்தம் : உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு.
நாகரீக பொட்டேடோ சிப்ஸ்களையும் வரட்டு கௌரவத்துக்காக உண்பது.
தற்கால நிலையில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் வாய் ருசிக்காக மட்டுமே வசீகரமான உணவுகளை உட்கொள்கின்றனர் என்ற ஆதங்கத்தையும்,
எதிர்கால சந்ததியைப் பற்றிய கவலையையும் தவறான உணவை உண்பதை என்பதைப் பற்றியும் விரிவாக எழுதி, ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் நூல் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன்.
உலகச் சந்தை என்ற போர்வையில் சுயநலக்காரர்கள் கடை விரிக்கும் எதிரியைப் புரிந்துகொண்டு தீய உணவுக்கும், நோய்களை உண்டாக்கும் உணவுக்கும் எதிராகப் போராட வேண்டி இருப்பதை விளக்குகிறார்.
ஜூனியர் விகடனில் தொடராக வந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.
அடுத்த சந்ததியையும் தோள் சேர்த்துக்கொண்டு யுத்தத்தை வெற்றிகரமாக முடிப்பது இப்போது நம் அனைவர் கையிலும் இருக்கிறது!
உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறுவிதங்களில் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகிறது உணவுயுத்தம்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் மற்ற வரலாற்று நூல்கள்: மறைக்கபட்ட இந்தியா, கோடுகள் இல்லாத வரைபடம்
There are no question found.
Rating & Review
There are no reviews yet.