View cart “முட்டாளின் மூன்று தலைகள்/Muttalin moondru thalaigal” has been added to your cart.
சஞ்சாரம்/Sancharam
₹340.00
தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது.
Customer reviews
3 reviews for சஞ்சாரம்/Sancharam
தமிழில் கரிசல் காட்டு நாதஸ்வர கலைஞர்கள் படும் பாட்டை அதற்கு உரிய பகடியுடன் பதிவு செய்த முதல் புதினம்.கதையின் ஊடாக சமூகத்தில் நடைபெறும் வழமைகளை பரிகசித்து சென்றது சிறப்பு.
எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டது முதல் அவருடைய படைப்புகளை வாசிக்க வேண்டிய எண்ணம் முதல் அவருடைய படைப்புகளை வாசிக்க வேண்டிய எண்ணம் எண்ணம் தோன்றியது. அவர் எழுதிய 2018ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது பெற்ற பெற்ற “சஞ்சாரம் விருது பெற்ற பெற்ற விருது பெற்ற பெற்ற “சஞ்சாரம்” புதினம் வாசிப்பதன் மூலம் அந்த எண்ணம் நிறைவேறியது. நலிவுற்ற பாரம்பரிய இசைக் கலைஞர்களுடைய வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட புதினம். நாதஸ்வர கலைஞர்கள் மட்டுமல்லாமல் மற்ற கலைஞர்களான கரகாட்டம், ஒயிலாட்டம், தவில் வாசிப்பவர்கள், அவர்களுடைய அனுபவங்கள், ஏமாற்றங்கள்,குற்ற உணர்வுகள், வெறுப்புகள், குடும்ப உறவுகள், அவமானங்கள், மகிழ்ச்சியான தருணங்கள் என அனைத்தும் வாசகர்களுக்கு கடத்துகிறார். பல இடங்களில் நம்மை கண்கலங்க வைக்கிறார். கலைஞர்களின் மேல் ஒரு அனுதாபத்தையும், மரியாதையையும் வாசகர்களுக்கு கடத்தி தான் ஒரு சிறந்த எழுத்தாளர் என உறுதிப் படுத்துகிறார். கலைஞர்களுக்கு பாராட்டும், மரியாதையும் எவ்வளவு முக்கியமானது என்பது ஒவ்வொருவருக்கும் புரிய வைக்கிறார். அவருடைய மற்ற படைப்புகளையும் படிக்க படைப்புகளையும் படிக்க படிக்க ஆவலுடன் உள்ளேன். புதினம் வாசித்து முடித்தவுடன் மனதில் “தில்லானா மோகனாம்பாள்” திரைப்படத்தை உடனடியாக காண வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது, அதையும் பார்த்து விட்டேன் பலவருடங்களுக்கு பிறகு.மொத்தத்தில் புதினத்தையும் திரைக்காவியத்தையும் ஒன்றுசேர ரசித்த மனதிற்கு நிறைவான நாள்.
நாதஸ்வர கலைஞர்களுக்கான ஓர் அடையாளமாக இந்த நாவல் அமைந்தது ள்ளது. கரிசல் பூமியின் வாசனை நாவலின் முடிவுவரை வாசகனை விட்டு நீங்காமல் பார்த்துக்ெண்டது தனிச்சிறப்பு..இது போன்ற கலைஞர்கைளை ஆதரித்து ஊக்குவிப்பது நம் அனைவரின் கடமை…வாழ்க இசை,வாழ்க இசைக் கலைஞன்.
நன்றி ராமகிருஷ்ணன் சார்.
Write a customer review