Preloader

துணையெழுத்து/Thunaiezhuthu

350
Estimated Delivery:
08 - 15 Dec, 2024
payment-method-c454fb (1)
Guaranteed safe & secure checkout

Description

துணையெழுத்து: தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரது துணையெழுத்து, ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து, வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதை அறிவீர்கள்.

மலையேறி தேனெடுப்பதைப் போல, இவரது எழுத்து தேடுதலும் சுவாரஸ்யமும் நிறைந்த ஓர் அனுபவம்.ஜனநெருக்கடி மிகுந்த மின்சார ரயிலில், ஒரு சிறுவன் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டு போவதைப் போல, தீராத வார்த்தைகளால் இதயத்தை வருடிக்கொண்டே பயணமாகிக் கொண்டிருக்கிறார்.

இவருடைய பயணத்தில் நம்மையும் சக பயணியாகச்  ஒரு நல்ல துனை சேர்த்துக் கொண்டிருக்கிறார். பயணம் முழுக்க இவர் காட்டுகிற நிகழ்ச்சிகள், பாத்திரங்கள், சொற்கள் எல்லாமே காலத்தால் அழியாத ஜீவிதம் மிக்கவை. மனதை மெல்லிய இறகாக்கி, பேரன்பில் மலர்த்தி வைப்பவை.

இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கையைத் தூண்டுகிறது.இதுவே துணையெழுத்தின் தனித்துவம்.

இந்த புத்தகத்தைப் பற்றி மேலும் அறிய புத்தகத்தின் கண்ணோட்டம்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்து போன்ற இன்னும் சில புத்தகங்கள்: தேசாந்திரி, கதாவிலாசம்