வீடில்லாப் புத்தகங்கள்/Veedilla Puthagankal
₹225.00 ₹250.00
பழையபுத்த கடைகளின் உலகையும் அங்கே கிடைத்த அரிய நூல்களையும் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே வீடில்லாப் புத்தகங்கள். தி இந்து தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி பரந்த வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்றவை இக்கட்டுரைகள்
Customer reviews
1 review for வீடில்லாப் புத்தகங்கள்/Veedilla Puthagankal
வீடில்லா புத்தகத்தை’ இரண்டாவது முறையாக படிக்கிறேன்.
வங்கி நுழைவுத் தேர்வு எழுதுகிற நண்பரின் மகளுக்கு படிக்கக்கொடுத்தேன்.
வாசிப்பது எப்படி? என்ற ஆர்வத்தை தூண்டும் என்பதற்காக கொடுத்தேன்.
எழுத்தாளர் எஸ். ரா அவர்களின் எழுத்து நடையைப்பற்றி அதுவும் கட்டுரைகளை நகர்த்தி செல்லும் பாங்கு
திகட்டாத ஒர் உணவுக்கு சமமானது.
அந்த வரிசையில் இந்த ”வீடில்லா புத்தகங்கள்” பற்றிய கட்டுரை தொகுப்பு நூல்.
பொதுவெளியில் கிடைக்கும் பழைய நூல்களைப்பற்றிய கட்டுரையிது.
நீங்கள் இந்த புத்தகத்தை படித்துவிட்டால் சுமார் 40லிருந்து 50புத்தகங்களாவது படித்த அனுபவம் கிட்டும்.
தேடலை தூண்டும். வாசிப்பை உற்ச்சாகப்படுத்தும்.
சினிமா, இலக்கியம், சூழலியல், வரலாறு,அறிவியியல்,மருத்துவம், போர்,தொன்மவியியல், இப்போது பேசப்படும் உயிரியியல் ஆயுதம்… என்று கூறிக்கொண்டே போகலாம்.
எடுத்துக்காட்டாக படிவிடுகிறேன்.
தாகூரின் ஹைக்கு பாணி கவிதையை ‘புகழ் என்னும் பிச்சை” என்ற கட்டுரை அட அடா என்ன அழகு ?!
பல தோழர்களிடம் சொல்லிவிட்டேன். என் முக நூல் பக்கத்திலும் படிவிட்டேன்.
கட்டாக
புகழ்
என்னை அவமானப் படுத்துகிறது.
எனென்றால் அது ரகசியமாய்
நான் எடுத்த பிச்சை.
#
குளத்தைப் பார்த்துச் சொன்னது
பனித்துளி
நான் இலைமீதிருக்கும் சிறுதுளி.
நீ தாமரை இலையின் அடியில் இருக்கும்
பெரிய துளி.
-இரவீந்திரநாத் தாகூர்.
அடுத்து சினிமாவைப்பற்றி ‘சினிமா என்னும் கனவு’ பேசுகிறது. அதில் வங்க இயக்குநர் மிருணாள் சென்னின் ‘ ஏக்தின் பிரதியின்’ படத்தைப்பற்றிய செய்தி
கலைப்பற்றிய சமூகப்பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று காட்டுகிறது.
இனி என் பரிசளிப்பு நூல் வரிசையில் இந்த புத்தகத்தையும் சேர்த்துவிட்டேன்.
ஒரே வரியில் இந்நூலைப்பற்றி
”ஒரு நூலில் ஒரு நூலகம்”
அன்புடன்
மணிவர்மா.
Write a customer review